Home One Line P1 பீட்டர் அந்தோனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

பீட்டர் அந்தோனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

530
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரும் சபா வாரிசான் கட்சியின் துணைத் தலைவருமான பீட்டர் அந்தோனி இன்று வியாழக்கிழமை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.

தமது வழக்கறிஞர் மார்டின் தோமியுடன் அவர் கோத்தா கினபாலு நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

2012 மற்றும் 2013- க்கு இடையில் ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் மேம்பாட்டு ஆணையம் (ரிஸ்டா) சம்பந்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம் என்று பீட்டர் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“நாளை (இன்று) நான் நீதிமன்றத்தில் இருப்பேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, நேற்று புதன்கிழமை மதியம் 2.45 மணிக்கு பீட்டர், சபா எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்து சுமார் மூன்று மணி நேரம் கழித்து வெளியேறினார்.