Home One Line P1 முடிதிருத்துபவரின் கொவிட்19 பரிசோதனை தேர்ச்சி சான்றிதழை வாடிக்கையாளர்கள் கோரலாம்

முடிதிருத்துபவரின் கொவிட்19 பரிசோதனை தேர்ச்சி சான்றிதழை வாடிக்கையாளர்கள் கோரலாம்

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்கள், முடிதிருத்துபவரின் கொவிட் 19 பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் சுகாதார சான்றிதழ்களை கேட்க உரிமை உண்டு என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

குறிப்பாக புலம்பெயர்ந்த முடிதிருத்தும் நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால், முடிதிருத்தும் கடைகள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவே இது என்று அவர் கூறினார்.

“வழக்கமாக பரிசோதனையை நடத்திய கிளினிக்குகள், அவர்கள் (முடிதிருத்தும்) நோயிலிருந்து விடுபடுவதாகக் கூறும் கடிதத்தை வெளியிடும். அந்தக் கடிதத்தைக் கேட்க வாடிக்கையாளர்களுக்கு உரிமை உண்டு. ”என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஜூன் 10 முதல் முடிதிருத்தும் கடைகள், சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.