கோலாலம்பூர்: கடந்த புதன்கிழமை தொடங்கி, தேசிய ஒற்றுமை அமைச்சகம் செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த 171 வழிபாட்டு தலங்களில், மீட்சிகான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் முஸ்லிம் அல்லாத தம்பதிகளுக்கு திருமண பதிவு அனுமதிக்கப்படுகிறது.
“எனவே, ஆலயத்தில் திருமண பதிவு நடத்த விரும்பும் தம்பதிகள் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு இல்லங்களின் பட்டியலை சரிபர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தேசிய ஒற்றுமை அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டு இல்லம் செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனில், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு திருமண பதிவு செயல்முறை தேசிய பதிவுத் துறையின் சமீபத்திய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று அது கூறியது.
தற்போது, அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களின் எண்ணிக்கை இன்னும் அப்படியே உள்ளது என்றும், மேலும் பல வழிபாட்டு தலங்களிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களையும் அமைச்சகம் கவனித்து வருவதாகக் கூறியது.