கோலாலம்பூர்: கூட்டங்கள், வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆனால், இது நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு உட்பட்டது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் இது ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், இதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் சிறப்பாக வடிவமைத்து வருகிறது.
“நான் விரைவில் அதனை (நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை) அறிவிப்பேன்.” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.