Home Video கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “பெண்குயின்” – அமேசோன் பிரைம் ஜூன் 19 வெளியீடு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “பெண்குயின்” – அமேசோன் பிரைம் ஜூன் 19 வெளியீடு

1107
0
SHARE
Ad

சென்னை – கொவிட்-19 பாதிப்பால் திரையரங்குகள் இன்னும் தமிழகம் எங்கும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் முடிவடைந்து திரையிடப்படாமல் இருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக கட்டண இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஜோதிகா நடிப்பில் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் அமேசோன் பிரைம் கட்டண இணையத் தளத்தில் வெளியிடப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 19-ஆம் தேதி அமேசோன் பிரைம் தளத்தில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “பெண்குயின்” என்ற திரைப்படம்.

#TamilSchoolmychoice

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த “நடிகையர் திலகம்” படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதன் காரணமாக, அவருக்கென இருக்கும் இரசிகர் கூட்டம் “பெண்குயின்” படத்திற்கான வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஆங்கிலத்தில் “பெங்குயின்” என்ற பெயரில் பறவையின் பெயரோடு வெளியாகும் இந்தப் படம் தமிழில் “பெண்குயின்” என்ற பெயரோடு விளம்பரப்படுத்தப்படுகிறது.

“பெண்குயின்” தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரையில் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யூடியூப் தளத்தில் மட்டும் பார்த்துள்ளனர்.

“பெண்குயின்” படத்தின் அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் கண்டு மகிழலாம்: