மேலும் அபிவிருத்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு தமக்கு இன்னும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தனிப்பட்ட நலன்களால் தான் கட்சியை விட்டு விலகியதாகக் கூறப்படும் குற்றசாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.
“தற்போது, வாரிசான் கட்சிதலைமையிலான மாநில அரசு இனி மத்திய அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை. இதனால் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து சபா மக்கள் பயனடைவது கடினம்.
“எனவே, நானும் கோலா பென்யு சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ லிமஸ் ஜூரியும் உப்கோவை விட்டு வெளியேறி மக்களின் நலனுக்காக பெரிகாத்தான் நேஷனல் ஆட்சியை ஆதரிப்பது கட்டாயமாகும்.” என்று அவர் கூறினார்.
வாரிசான் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் டத்தோ டாக்டர் யூசோப் யாகோப், அவரும் லிமஸும் தங்கள் கட்சியை விட்டு வெளியேறி தனிப்பட்ட இலாபத்துக்காகவும், மத்திய அரசாங்க திட்டங்களிலிருந்து பயனடைவதாகவும் என்று கூறியதற்கு ஜேம்ஸ் இவ்வாறு பதிலளித்தார்.