Home One Line P2 எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு

எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு

992
0
SHARE
Ad

புது டில்லி: லடாக் எல்லையில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, மூன்று பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை கலந்த மோதலில் இந்தியா – சீனா நாட்டு இராணுவர் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 என்ரு கூறப்படுகிறது, ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய இராணுவம், எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியோடு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது.

எல்லையில் நடந்த இந்த மோதல் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.