கோலாலம்பூர்: உணவகங்களில் அதிகபட்சம் நான்கு பேர் அமர்ந்து உண்ணும் மேசையில் குறைந்த அளவிலான நபர்கள் அமர்வது குறித்த விதிமுறைகளை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
இப்போது மேசையின் அளவைப் பொறுத்தது என்றும், ஆனால் இன்னும் கூடல் இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“ஆமாம், கூடல் இடைவெளி இருக்கும் வரை, ஒரு நீண்ட மேசையில் 10 பேர் உட்கார முடியும் என்றால் பத்து பேர் அமரலாம். ஆனால், இடைவெளி இருக்க வேண்டும்.
“மேசை பெரியதாக இருந்தால், (10 பேருக்கு), இரண்டு பேர் மட்டும் உட்கார மாட்டார்கள். உதாரணமாக, மேசை எட்டு பேருக்கு பொருந்தினால், எட்டு பேர் அமரலாம்.” என்று இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜூன் 10 அன்று ஒரே மேசையில் ஏழு பேர் அமர்ந்த பின்னர் ஈப்போவில் உள்ள ஓர் உணவகத்தை ஒரு வாரம் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு நபர்களுக்கும் தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.