புது டில்லி: நேற்று புதன்கிழமை ஐநா பாதுகாப்பு குழு தேர்தலில் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றது.
இதன் மூலமாக இந்தியா ஐநா பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக 2021 முதல் 2022 காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
“ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்கு உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா செயல்படும்.” என்று இந்தியப் பிரதமர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றன. கனடா தேர்தலில் தோல்வியடைந்தது.