Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் 257 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: சிங்கப்பூரில் 257 புதிய சம்பவங்கள் பதிவு

631
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 நோய்த்தொற்றுகள் 257 சம்பவங்களாக அதிகரித்துள்ளன. உள்ளூர்வாசிகளிடையேயான தொற்றுகள் நான்கு சம்பவங்கள் மட்டுமே.

இதன் மூலமாக மொத்தமாக 41,473 கொவிட்19 சம்பவங்களை சிங்கப்பூர் பதிவு செய்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட 12 நண்பகல் தரவுகளின் சுருக்கத்தில், பெரும்பாலான தொற்றுநோய்கள் இன்னும் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் ஏற்பட்டவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட முழு தரவுகளில், உள்ளூர் மக்களிடயே 1,806 சம்பவங்கள் பதிவான நிலையில், 581 இறக்குமதி சம்பவங்கள் பதிவாகின. மேலும், 38,829 சம்பவங்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் விடுதிகளில் ஏற்பட்டவை.