Home One Line P1 தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அம்னோ ஆர்வம் காட்டவில்லை

தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அம்னோ ஆர்வம் காட்டவில்லை

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் யோசனையில் அம்னோ இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, பாஸ் கட்சியுடன் உருவாக்கப்பட்ட முவாபாக்காட் நேஷனலுடன் ஒத்துப்போக விரும்புவதாக தெரியவருகிறது.

வட்டாரங்களின்படி, இந்த வாரம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது, ஆனால், அதற்கு அதன் மத்திய தலைவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணி பதிவு பிரச்சனை அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முறையாக எழுப்பப்பட்டது, ஆனால், அதற்கு உச்சமன்றக் குழுவினரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

“உச்சமன்றக்குழு இன்னும் பாஸ் கட்சியுடன் உருவாக்கி கையெழுத்திட்ட முவாபாக்காட் நேஷனலுடன் தொடரும்.

“அம்னோ இதுவரை முறையாக தேசிய கூட்டணி சேர, அது இன்னும் அதன் முடிவை வெளிப்படுத்தவில்லை.” என்று அவர் மலேசியாகினியிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளது.