Home One Line P1 சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது

சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது

553
0
SHARE
Ad

குவாந்தான்: சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது.

இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு எதிராக தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஷாரிம் முகமட் சின் , 41, போட்டியை எதிர்கொள்கிறார்.

முன்னாள் பெக்கான் பெர்சாத்து துணைத் தலைவர் தெங்கு சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி ஆகியோருடன் முகமட் ஷாரிம் இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

இங்குள்ள தேசிய இளைஞர் திறன் நிறுவனத்தில் (IKBN) வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது.

கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், முதல் முறையாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், புதிய தேர்தல் இயல்புகளை கடைபிடிக்க மக்கள் தயாராகுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் காலை 9 மணிக்கு தொடங்கியது.

எவ்வாறாயினும், வேட்பாளர், மற்றும் ஆதரவாளர் அல்லது அவர்களில் இருவர் அல்லது அவர்களில் யாராவது மட்டுமே வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 6 அன்று அதன் முன்னாள் டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹாருண் இறந்ததைத் தொடர்ந்து சினி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கொவிட்19 தொற்றுநோயால் வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களைக் கருதி நம்பிக்கைக் கூட்டணி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.