Home One Line P2 கொவிட்19: பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது!

கொவிட்19: பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது!

629
0
SHARE
Ad

பிரேசில்: கொவிட்19  காரணமாக பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதனிடையே, அங்கு இறப்பு எண்ணிக்கை 49,000-ஐ நெருங்குகிறது.

பிரேசில் 1,032,913 கொவிட்19 சம்பவங்களை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,771 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில், அங்கு 1,206 இறப்புகளைப் பதிவுசெய்தது. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 48,954- ஆக உள்ளது.

#TamilSchoolmychoice

பிரேசில் சமீபத்தில் ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை முறியடித்து, அதிக தொற்றுநோய்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஆனால், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சோதனையின் பற்றாக்குறை மற்றும் குறைவான அறிக்கையிடல் காரணமாக நோய்த்தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.