Home One Line P2 சீனா இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை!- நரேந்திர மோடி

சீனா இந்தியாவிற்குள் ஊடுருவவில்லை!- நரேந்திர மோடி

1024
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா சீனா எல்லையில், இந்திய சீன இராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலைக் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து கலந்தாலோசனை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை நடத்தியிருந்தார்.

“சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய  ஆயுதப்படை மேற்கொள்ளும் என்ரும்,  ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். நமது படை வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதேவேளையில், இறையாண்மையை காப்பதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும்.” என்று மோடி மேலும் கூறியுள்ளார்.

திங்களன்று இரவு நடந்த மோதலில், இந்திய இரணுவ வீரர்கள் 20 பேர் மரணமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சீன தரப்பிலும் மரணங்கள் ஏற்பட்ட நிலையில், அது குறித்த எண்ணிக்கை குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.