Home One Line P2 சீனாவின் இராணுவ பதிலடிக்கு இந்தியா வீழ்ந்து விடும்!

சீனாவின் இராணுவ பதிலடிக்கு இந்தியா வீழ்ந்து விடும்!

1403
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா சீனா எல்லையில், இந்திய- சீன இராணுவ வீரர்களிடையேயான மோதலில் அண்மையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும், 76 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது, காயமடைந்தனர் என்கிற தகவலை சீன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமெரிக்க உளவுத்துறையின் தகவல் மற்றும் தகவல்கள் இடைமறிப்புகள் அடிப்படையில் சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய மோதலைத் தொடர்ந்து தற்போது இந்தியா இராணுவ விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய விதிப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்ப துப்பாக்கிகளை பயன்படுத்த படைத்தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அதிகாரம் வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறியதைத் தொடர்ந்து இந்த புதிய விதிமுறைகளை இராணுவம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த சீனா, இந்தியா எல்லையில் பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் முடிவு அதுவாக இருந்தால், சீனா அதற்கு தகுந்த பதில் கூறும் என்று கூறியுள்ளது.

சீனாவின் இராணுவ தளவாடங்கள் இந்தியாவைக் காட்டிலும் பெரியது என்றும், சாதாரண கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கியதில் பல இழப்புகளைச் சந்தித்த இந்தியா, சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.