Home One Line P1 திரையரங்குகள், நேரடி நிகழ்ச்சிகள் செயல்பட ஜூலை 1 முதல் அனுமதி

திரையரங்குகள், நேரடி நிகழ்ச்சிகள் செயல்பட ஜூலை 1 முதல் அனுமதி

643
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திரையரங்குகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கொவிட் 19 தினசரி ஊடக சந்திப்பில் இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

எவ்வாறாயினும், மூடிய மண்டபத்தில் பங்கேற்பாளர்கள் 250 பேருக்கு மிகாமல், மண்டபத்தின் திறனைப் பொறுத்து மட்டுமே இந்த செயல்பாடு அனுமதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக கூடல் இடைவெளிக்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் எல்லா நேரங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.