Home One Line P1 வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது

550
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மூத்த அதிகாரி மற்றும் இரண்டு மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

30 முதல் 48 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் இங்குள்ள பாசிர் கூடாங் படகு முனையத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டனர்.

ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சமூக வருகை அனுமதி அட்டையைப் பயன்படுத்தி வெளிநாட்டினருக்கு போலி நுழைவு அனுமதி சேவைகளை இக்கும்பல் வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

விசாரணையின்படி, வெளிநாட்டினர் 1,500 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை செலுத்தினர் என்று நம்பப்படுகிறது.

“பாசிர் கூடாங் பேரி துறைமுகத்திற்கு வந்து, போலி முத்திரையைப் பயன்படுத்தி வெளிநாட்டினரின் இயக்கம் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கையாளப்படும். அவர்கள் இக்கும்பலுடன் ஒத்துழைத்து வீடு திரும்புவதற்கான இயக்கத்தை நிர்வகிக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.