Home One Line P2 “சக்ரா” – விஷாலின் அடுத்த படம் – முன்னோட்டம் வெளியீடு

“சக்ரா” – விஷாலின் அடுத்த படம் – முன்னோட்டம் வெளியீடு

978
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவில் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் சில திரைப்படங்களின் முன்னோட்டங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நேற்று சனிக்கிழமை (ஜூன் 27) யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது முதல், ஒரே நாளிலேயே இந்த முன்னோட்டம் 1.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் இந்தியா என்ற வாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் மின்னியல் வழியான திருட்டுகளை கதையின் மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது இந்தப் படம்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே “இரும்புத் திரை” என்ற படமும் இதே போன்றதொரு கதையம்சத்தோடு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. “இரும்புத்திரை 2” என்ற விளம்பரத்தோடு இந்தப் படம் வெளியாகிறது.

அந்தப் படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்திரன். ஆனால் சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்தன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

விஷால் இராணுவ அதிகாரியாக வருகிறார். நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

முன்னோட்டம் வெளியிடப்பட்டிருந்தாலும், படம் வெளிவரும் தேதி அறிவிக்கப்படவில்லை.

“சக்ரா” படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: