Home One Line P1 கொவிட்19: மக்கள் தொடர்ந்து நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அழைப்பு

கொவிட்19: மக்கள் தொடர்ந்து நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அழைப்பு

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அதிக துறைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்19 பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க புதிய நடைமுறைகள் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் மக்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அரண்மனையின் முகநூல் கணக்கில் ஒரு பதிவில் மாமன்னர் தெரிவித்திருந்தார்.

“மேலும் சமூகத் துறைகள் மற்றும் பாலர் பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாமன்னரின் அழைப்பு வருகிறது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அதன் 106- வது நாளிலும், மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையின் 22- வது நாளிலும் இன்று சுற்றுலா துணைத் துறை உள்ளிட்ட பல பொருளாதாரத் துறைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.