Home One Line P2 கொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு

551
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரொனா தொற்று சம்பவங்கள் கிட்டத்தட்ட 55,000-ஆக அதிகரித்துள்ளன.

இது ஒரு புதிய ஒரு நாள் சாதனை அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனைத் தாண்டி 2,735,554-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 128,684 இறப்புகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான புளோரிடாவும் முந்தைய ஒற்றை நாள் சாதனையை முறியடித்தது, 10,109 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான அந்தோனி பாவ்சி செவ்வாயன்று ஒரு கொவிட்19 நோய்த்தொற்றுகளின் தினசரி அதிகரிப்பு 100,000-ஐ எட்டக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.