Home One Line P1 சரவாக் மாநிலத் தேர்தலில் அம்னோ-பாஸ் போட்டியிடாது

சரவாக் மாநிலத் தேர்தலில் அம்னோ-பாஸ் போட்டியிடாது

610
0
SHARE
Ad

கூச்சிங்: அடுத்த மாநில தேர்தலில் (PRN 12) பெர்சாத்து மற்றும் பாஸ் சரவாக்கில் போட்டியிடாது என்றும் அதற்கு பதிலாக காபுங்கான் சரவாக் கட்சி (GPS) கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று சரவாக் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் தேசிய கூட்டணி கூறு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்ட சந்திப்பில் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த உத்தரவாதம் ஜிபிஎஸ் எதிர்க்கட்சிக்கு ஒரு தெளிவான பாதையை தருவது மட்டுமல்லாமல், அடுத்த தேர்தலில் கட்சிக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை தேசிய கூட்டணி கூறு கட்சி மதிக்கிறது என்பதற்கான ஒரு நல்ல அறிகுறியாகும்.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

துணை முதலமைச்சராக இருக்கும் மாசிங், ஜிபிஎஸ் கட்சி மொகிதினை பிரதமராக ஆதரிப்பதாகவும், 15- வது பொதுத் தேர்தலுக்கு தலைமை தாங்குவதாகவும் அவர் கூறினார்.

“சரவாக் மாநிலத்தில் 12-வது தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறும் என்று டத்தோ பாதிங்கி ஜொஹாரி அபாங் கூட்டத்தில் தெரிவித்தார். ஜிபிஎஸ் தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளை எதிர்க்க நான்கு கூறு கட்சிகள் தயாராகி வருகின்றன. ” என்று அவர் கூறினார்.