Home One Line P1 கட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்

கட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டிருந்தாலும், சினி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நாளை சனிக்கிழமை வாக்களிப்பதற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொவிட்19 பாதிப்பினால், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், தேர்தலைத் தொடர்ந்து புதிய விதிகளை பின்பற்றுமாறு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“கடுமையான நடைமுறைகள் வழங்கப்பட்டாலும், பொறுப்பை (வாக்களிக்க) செய்ய முடியாது என்று இது குறிக்கவில்லை. வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வட்டாரத்திற்கு வெளியே உள்ள வாக்காளர்கள் கூட வாக்களிக்கத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

வரிசையில் நிற்கும் போது கூடல் இடைவெளி மற்றும் முகக்கவசங்களைப் பயன்படுத்துதல் வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள அனைத்து நடைமுறைகளும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை ஜூலை 4-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

ஜூன் 20 அன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூன் 30 நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் முகமட் ஷரீம் முகமட் ஜின் (தேசிய முன்னணி), மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு, முகமட் சுக்ரி முகமட் ரம்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த  6- ஆம் தேதி டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹருண் (60), மாரடைப்பால் கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து சினி சட்டமன்றம் காலியானது.

14- வது பொதுத் தேர்தலில், 10,027 வாக்குகளைப் பெற்ற அபுபக்கர், 5,405 வாக்குகளைப் பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் பாசில் நூர் அப்துல் காரீம் மற்றும் 1,065 வாக்குகளைப் பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ரசாலி இத்னைன் ஆகியோரை விட 4,622 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.