Home One Line P1 சினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி

சினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி

563
0
SHARE
Ad

பெக்கான் – இன்று சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற சினி இடைத் தேர்தலில் 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றது.

20,990 வாக்காளர்களைக் கொண்டது சினி சட்டமன்றம். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பெக்கான் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதியாகும் சினி.

இன்று நடைபெற்ற இடைத் தேர்தல் வாக்களிப்பில் 73.87 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 15,231 ஆகும்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட முகமட் ஷாரிம் முகமட் சைன் 13,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இரண்டு சுயேச்சைகள் அவரை எதிர்த்துப் போட்டியிட்டனர். தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹூசேன் 1,222 வாக்குகள் பெற்றார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான முகமட் சுக்ரி முகமட் ரம்லி 137 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

செல்லாத வாக்குகள் 239 ஆகும்.

இதைத் தொடர்ந்து தேசிய முன்னணி வேட்பாளர் 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.