புது டில்லி: இந்தியா சீனா எல்லையிலிருந்து தங்களது படைகளை, சீனா குறைந்தது ஒரு கி.மீ தூரத்திற்கு திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில்தான் கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று இந்திய – சீனா வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பு படையினருக்கும் இடையே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து மட்டும் சீன படையினர் திரும்பி சென்றதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் ஆய்வினை மேற்கொண்டார். அதன் பிறகு, படைகளை திரும்ப பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம், இந்திய மற்றும் சீனப் படைகளின் தளபதிகள் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.