புது டில்லி: இந்திய இராணுவம், இந்திய இராணுவ வீரர்களுக்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தங்கள் கைபேசிகளில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது நீக்குமாறு இந்திய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், லடாக் எல்லையில் இந்தியா – சீனா இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, டிக் டாக், யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்ததை தொடர்ந்து, இராணுவ வீரர்களுக்கான இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி தடை அவற்றை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளது.