சுங்கை பட்டாணி: பீடோங், சுங்கை புதாரில் உள்ள ஒரு இரப்பர் தோட்டத்தில் கூடாரத்தில் சூதாட்டம் விளையாடிய 9 பேர் நேற்று இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கெடா குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், மூத்த உதவி ஆணையர் ஷாபி அகமட் கூறுகையில், இந்த இடம் மலைப்பாதையில் அமைந்திருந்தது என்றும், அங்கு காவல்துறையினரை சம்பந்தப்பட்டவர்கள் கண்டறிவதைத் தடுக்க விளக்குகளைப் பயன்படுத்தாமல் இருட்டில் நடக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
கெடா குற்றப் புலனாய்வுத் துறை இரவு 10.30 மணியளவில் சோதனைக்கு முன்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்துக் கொண்டிருந்தது என்று அவர் கூறினார்.
சோதனையின் விளைவாக, 1,300 ரிங்கிட் ரொக்கம், இரண்டு மேசைகள், எட்டு நாற்காலிகள், விளக்குகள் மற்றும் கூடாரங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 35 முதல் 51 வயதுக்கு உட்பட்டவர்கள்.
திறந்த சூதாட்ட சட்டம் 1953- இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.