Home One Line P1 6 அல்ஜசீரா ஊழியர்கள் விசாரிக்கப்பட்டனர்

6 அல்ஜசீரா ஊழியர்கள் விசாரிக்கப்பட்டனர்

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அடுத்து மலேசிய அதிகாரிகளால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தவறாக நடநத்தப்பட்டதை சித்தரிக்கும் ‘101 ஈஸ்ட்’ ஆவணப்படத்தின் அறிக்கை குறித்து விளக்கமளிக்க ஆறு அல் ஜசீரா ஊழியர்கள் இன்று காலை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்கள் காலை 8.50 மணிக்கு புக்கிட் அமான் அலுவலகத்திற்கு ஹிஷாம் தெஹ் போக் தேஹ் தலைமையிலான ஏழு வழக்கறிஞர்களுடன் வந்தனர்.

அழைக்கப்பட்டவர்களில் அல் ஜசீரா பத்திரிகையாளர் ட்ரூ ஆம்ப்ரோஸ் என்பவரும் அடங்குவார்.

#TamilSchoolmychoice

மேலும் 25 பேர் 25 நிமிட ஆவணப்படம் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

அல்ஜசீரா நிர்வாகம் நேற்று இரவு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தற்காத்து, ஆவணப்படத்திற்கு எதிர்வினையைத் தொடர்ந்து அதன் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடையூறு குறித்து கவலை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த செய்தி அறிக்கையை வெளியிட்ட, அல்ஜசிரா, அதன் செய்தியாளரை காவல் துறை விசாரிக்கும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட கொவிட்19 பாதிப்பைக் கையாளும் வகை, மலேசியாவை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து அல்ஜசீரா மீது காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே, கொவிட் 19 நடவடிக்கையை மலேசியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததால், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சேவை செய்வதில் பாகுபாடு காட்டுவதாக 20.25 நிமிடங்கள் கொண்ட ‘லோக்ட் ஆப் இன் மலேசியாஸ் லோக்டவுன்’ என்ற காணொளி அறிக்கையில் அல்ஜசீரா கூறியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதிகாரிகள் வெளிநாட்டினரைக் கொடுமைப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

இது குறித்து பேசிய தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்த அல்ஜசீரா செய்தி நிறுவனம் நெறிமுறையற்றது என்று குற்றம் சாட்டினார்.

அல்ஜசீரா ஆவணப்படம் ஒரு பொய் என்று அவர் கூறினார்.

“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. தடுத்து வைத்தது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறினார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அனுமதிக்கும் ஒரு நாட்டைக் குறிப்பிடுமாறு அல்ஜசீராவுக்கு இஸ்மாயில் சவால் விடுத்திருந்தார்.

மேலும், இந்த அறிக்கைக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அல்ஜசீராவை இஸ்மாயில் வலியுறுத்தியிருந்தார்.