Home One Line P2 சிங்கப்பூர் : 83 தொகுதிகளில் பிஏபி – 10 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி – வெற்றி

சிங்கப்பூர் : 83 தொகுதிகளில் பிஏபி – 10 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி – வெற்றி

605
0
SHARE
Ad

சிங்கப்பூர் – வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 10.00 மணி வரை நடந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில்  ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

பிரதமர் லீ சியன் லூங் (படம்) தலைமைச் செயலாளராகப் பதவி வகிக்கும் பிஏபி கட்சிக்கு மீண்டும் ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தாம் சிங் தலைமையிலான முன்னணி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது.

மொத்தமுள்ள 93 இடங்களில் 61.24 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆளும் பிஏபி கட்சி வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சிகள் வலுவான ஆதரவைப் பதிவு செய்தன.
#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலை விட இந்த முறை ஆளும் கட்சியின் மொத்த ஆதரவு வாக்குகளில் 7 விழுக்காடு சரிவு காணப்பட்டது.

நேற்று நடைபெற்றது சிங்கப்பூரின் 18-வது பொதுத் தேர்தலாகும். 1965-இல் மலேசியாவிலிருந்து சுதந்திரம் பெற்றுப் பிரிந்த பின்னர் அந்நாட்டில் நடத்தப்படும் 13-வது தேர்தலாகும் இது.

பிரதமர் லீ சியன் லூங்கின் இறுதித் தவணையாக இந்த நாடாளுமன்றத் தவணை திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய லீ சியன் லூங் “எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தெளிவான அதிகாரம் இது. இளம் வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பதையும் உணர்ந்திருக்கிறோம்” என்றார்.

தனது பதவிக் காலத்தின் போது அடுத்த வலுவான பிஏபி தலைமைத்துவமிடம் ஆட்சியை ஒப்படைப்பேன் என்றும் லீ சியன் லூங் கூறினார்.