Home உலகம் இந்தோனேசியாவில் விமானம் கடலுக்குள் பாய்ந்தது: 130 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்தோனேசியாவில் விமானம் கடலுக்குள் பாய்ந்தது: 130 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

465
0
SHARE
Ad

f6aaa0a3-9682-4369-919e-28705a632a39_S_secvpf.gifஜகர்த்தா, ஏப்ரல் 13-  இந்தோனேசியாவின் சுற்றுலாத்தலமாக பாலித் தீவு விளங்குகிறது. இந்த தீவிற்கு வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள தென்பசார் என்ற விமானத் தளத்திலிருந்து 130-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு இன்று லையன் ஏர் போயிங் 737 என்ற விமானம் ஒன்று புறப்பட்டது.

ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென அருகில் இருந்த கடலுக்குள் பாய்ந்தது. ஆனால், எந்தவித சேதாரமும் இன்றி விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மீட்கப்பட்டவர்களில் தலை மற்றும் கையில் காயமடைந்த 7 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.