Home உலகம் ஜப்பானில் கடும் நில நடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 23 பேர் காயம்

ஜப்பானில் கடும் நில நடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 23 பேர் காயம்

444
0
SHARE
Ad

indexடோக்கியோ, ஏப்ரல் 13- ஜப்பானில் அவாஜிஷிமா தீவு உள்ளது. இங்கு இன்று காலை 5.33 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது பொதுமக்கள் தூங்கி கொண்டிருந்தனர். வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடினார்கள். இந்த நில நடுக்கத்தில் அவாஜிஷிமா தீவில் உள்ள கியோனோ, ஓசாகா, ஓசாயமா, தொகுஷிமா மற்றும் புகுய் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

நில நடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 23 பேர் காயம் அடைந்தனர். நில நடுக்கம் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

இதற்கிடையே 6.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அவா ஜிஷிகா தீவு பகுதிக்கு கிழக்கே செடோ இண்டேண்ட் கடலில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நில நடுக்கம் காரணமாக அவாஜி ஷிமா தீவில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புகுய் பகுதியில் 2 அணு உலைகள் உள்ளன. நில நடுக்கத்தால் அதில் பாதிப்புகள் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளன. அவாஜிஷிமா தீவில் கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி 7.3 ரிக்டரில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் 6400 பேர் உயிரிழந்தனர். பின்னர் தற்போது தான் இங்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.