கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கம் ‘அரண்மனை கதவு’ வழியாக ஆட்சி அமைத்தது என்றும், ‘பின் கதவு’ வழியாக இல்லை என்றும் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
தேசிய கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்னர் முறையான ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசாங்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
“இங்குள்ள 113 பேரில் (அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்) ஒவ்வொருவருக்கும் மக்கள் ஆணை உள்ளது. இது முறையான ‘அரண்மனை கதவு’ அரசாங்கம், ‘பின் கதவு’ அரசு அல்ல. அரசாங்கம் மீதான குற்றச்சாட்டை நிறுத்துங்கள். இது மாமன்னரின் முடிவை அவமதிக்கிறது, “என்று அவர் கூறினார்.
அல்-சுல்தான் அப்துல்லா ஒப்புதல் அளித்து, எட்டாவது பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமனம் மதிப்பீடு செயல்முறையின் அடிப்படையில் அமைந்தது.
உண்மையில், பெரும்பாலான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டாவது பிரதமராக லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதை ஷாஹிடான் காசிம் இடையில் குறுக்கிட்டுப் பேசினார்.
இந்த விஷயத்தை அகமட்டும் ஆதரித்ததாகவும், ஆனால் லங்காவி (மகாதீர்) பதவி விலகியதை அடுத்து இந்த சத்தியப் பிரமாணம் பொருந்தவில்லை என்று கூறினார். அதன் பிறகே தாங்கள் பாகோவை (மொகிதின்) ஆதரித்ததாக அவர் கூறினார்.
இதனிடையே, ‘பின் கதவு அரசு’ மற்றும் ‘துரோகி’ என்ற சொற்களை நாடாளுமன்ற விதிகளுக்கு முரணானது என்று கருத வேண்டும் என்று அகமட் பரிந்துரைத்தார்.