Home One Line P1 அசாலினா நியமனம் சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளது!

அசாலினா நியமனம் சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளது!

476
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவையின் புதிய துணைத் தலைவராக அசாலினா ஒத்மான் சைட் நியமிக்கப்பட்டதை தேசிய கூட்டணியின் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆதரித்தனர்.

இந்த நியமனம் வரலாறு நிறைந்ததாக கருதப்படுவதாகவும், நாட்டுக்கு சாதகமானதாகவும் கருதப்படுகிறது என்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

பெண்களின் பங்கை மிக உயர்ந்த மட்டத்தில் வலுப்படுத்துவதில் இது உதவும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள், தேசிய கூட்டணி மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசாலினாவின் நியமனத்தை சரியான நேரத்தில் ஏற்பட்ட நியமனமாகப் பார்க்கிறோம்.

இந்த அறிக்கையை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹலிமா முகமட் சாதிக், மஸ்துரா முகமட் யாசிட், நோராய்னி அகமட் மற்றும் அசிசா முகமட் டன் உள்ளிட்டவர்கள் ஆதரித்தனர்.

இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாக அசாலினா திகழ்கிறார். நேற்று முன்னாள் அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் நோர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணை அவைத் தலைவர் இங்கா கோர் மிங் பதவி விலகினார்.

அதனை அடுத்து, 57 வயதான அசலினா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.