Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 900,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு

கொவிட்19: இந்தியாவில் 900,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு

519
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்று பாதிப்பு 900,000-ஐக் கடந்துள்ளது. இன்னும் நான்கு நாட்களில் தொற்று எண்ணிக்கை ஒரு மில்லையனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 553 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 23,727- ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, நாட்டில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழகம், டில்லி, குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கையானது 142,798- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து, 5- வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.