Home One Line P1 கொவிட்19: நாட்டில் இன்று தொற்று ஏற்படவில்லை!

கொவிட்19: நாட்டில் இன்று தொற்று ஏற்படவில்லை!

476
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,729-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 சம்பவங்களும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று நால்வர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8524-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 83 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.