Home One Line P2 திருக்குறளைப் போற்றிய மோடி!

திருக்குறளைப் போற்றிய மோடி!

782
0
SHARE
Ad

புது டில்லி: சமீபக்காலமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்மையில், லடாக்கின் கிழக்குப் பகுதியில், கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது இராணுவ வீரர்களிடையே உரையாற்றியபோது திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.

#TamilSchoolmychoice

இவ்வாறாக, பல்வேறு தருணங்களில் அவர் திருக்குறளை மேற்கோளிட்டு பேசி வருவதை, மூத்த பத்திரிகையாளர் மாலன் கட்டுரையாக எழுதி உள்ளார்.

இந்நிலையில், அந்த கட்டுரையின் படங்களை தமது டுவிட்டர் பக்கத்தில் மோடி பகிர்ந்து, தமிழில் திருக்குறளின் பெருமையை எழுதியுள்ளார். இது பலரது கவத்தை ஈர்த்துள்ளது.

“திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

“தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய எழுத்தாளர் மாலன், பிரதமர் தமது எழுத்தினைப் பகிர்ந்தது தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

“மலேசியா, ஐநா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதை அக்கட்டுரையின் வழி கூறியிருப்பேன். இதில் அரசியல் ஏதும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு இவை பேசப்பட்டவை. நமது மொழியைப் பிற மொழிக்காரர் பேசும் போது மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.