Home One Line P1 லீமா’ 21 கண்காட்சி இரத்து!

லீமா’ 21 கண்காட்சி இரத்து!

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மார்ச் 16 முதல் 20 வரை நடைபெறவிருந்த 2021 லங்காவி அனைத்துலக கடல், வான்வழிக் கண்காட்சி (லீமா ’21) இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொவிட்19 தொற்றுநோய் மலேசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்பு இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

லீமா’ 21- இன் முக்கிய ஏற்பாட்டாளர்களாக தற்காப்பு அமைச்சும், போக்குவரத்து அமைச்சும் கொவிட்19- இன் உலகளாவிய தாக்கத்தை அறிந்திருக்கின்றன. இது ஆரோக்கியம் அடிப்படையில் மட்டுமல்ல, சமூக மற்றும் பொருளாதார உலகில் பெரிய தாக்கத்தையும் கொண்டுள்ளது.

“ஆகவே, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, கொவிட்19 பாதிப்புக் காரணமாக லீமா’21-ஐ நாம் இரத்து செய்துள்ளோம். ” என்று அது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி உள்ளதால், இம்முறை இது சாத்தியப்படாது என்று அது கூறியது.

“பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும். அதுவும், கொவிட்19 பாதிப்புக் காரணமாக இம்முறை இந்த கண்காட்சியை செயல்படுத்த முடியாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாதிப்பு பரவாமல் இருக்கவும் இது உதவும். நேரம் பற்றாக்குறையும் இதற்கு முக்கியக் காரணம். இம்மாதிரியான பெரிய அளவிலான கண்காட்சிகளுக்கு நீண்ட, குறிப்பிட்ட திட்டமிடல் அவசியம். ” என்று அது தெரிவித்தது.

பிற நாடுகள், தரப்புகளின் கருத்துகளும், இதில் கருத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.