ஜோகூர் பாரு: மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு மூத்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இவர்களுடன் மேலும் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தெங்கு ஜஜாங் சகிதா தெங்கு ரெட்சுவான், 54; ரசாலி முகமட், 55; முகமட் அமிர் நாசீர், 61; ஹாரிஸ் பாட்சிலா அபுபக்கர், 48; 50 வயதான நோரியாதி அபுபக்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஐவரும் வெவ்வேறு நீதிமன்ற அறைகளில் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினர்.
நோரியாதி, பாசிர் கூடாங் குடிநுழைவுத் துறை அலுவலகத்தின் துணை இயக்குநர் ஆவார். ஹாரிஸ் பாட்சிலா மூத்த குடிநுழைவுத் துறை அதிகாரியாவார். இவர்களுக்கு எதிராக எட்டு மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் ஜூன் 15, மதியம் 12 மணிக்கு பாசிர் கூடாங் துறைமுகத்தில் இந்த குற்றத்தைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் கடத்தல் தடுப்பு, புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007- இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்கலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விரிக்கப்படும்.
வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஜூலை 23-ஐ நிர்ணயித்துள்ளது.