வாஷிங்டன்: பாப்புவா நியூ கினியின் வடகிழக்கில், வாவிலிருந்து 300 கி.மீ தூரத்திற்குள் கடலோரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயினும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அது மீண்டும் மீட்டுக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணியளவில் 85 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால், ஒரு மணி நேரம் கழித்து ஆபத்து கடந்துவிட்டதாகக் கூறி அதனை மீட்டுக் கொண்டது.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.