Home One Line P1 வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர் வெளியே உணவு உண்ணும் படத்தினால் பரபரப்பு

வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர் வெளியே உணவு உண்ணும் படத்தினால் பரபரப்பு

491
0
SHARE
Ad

ஈப்போ: கொவிட்19 நோய்க்கான கண்காணிப்பில் உள்ள ஒருவர்  கடை ஒன்றில் சாப்பிடுவதைக் கண்டதாகக் கூறப்படும் செய்தியை மாநில சுகாதாரத் துறை விசாரிக்கும்.

இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லே மிங் கூறினார்.

மேலும், வீட்டு தனிமைப்படுத்தலை கடைபிடிக்க யாராவது தவறிவிட்டார்களா என்பதை அறிய சோதனைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புகாரை விசாரிக்க சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

“பரவலாகப் பகிரப்படும் செய்தி உண்மை என்று நாங்கள் கண்டறிந்தால், குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

ஒரு பெண் தனது மணிக்கட்டில் இளஞ்சிவப்பு குறிச்சொல் அணிந்த புகைப்படம், அவர் மருத்துவமனையிலிருந்து வந்ததைப் போல தோற்றமளிக்கிறது. அவர் கடையில் அமர்ந்து உணவு உண்பது போன்ற புகைப்படம் பரலாகி வருகிறது.

மேரு ஹைட்ஸ் பகுதியைச் சேர்ந்த அப்பெண், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பண்டார் மேரு ராயாவில் தனது உணவை உட்கொண்டதாக அச்செய்தி தெரிவித்தது.