Home One Line P1 இடியுடன் கூடிய மழை ஆகஸ்டு நடுப்பகுதி வரை தொடரும்

இடியுடன் கூடிய மழை ஆகஸ்டு நடுப்பகுதி வரை தொடரும்

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் சில பகுதிகளில் தற்போது அனுபவிக்கப்படும் வரும் கடுமையான வானிலை ஆகஸ்டு நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இயக்குனர் சையிலான் சைமன் கூறுகையில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

மாலையில், மேற்கு கடற்கரையில், குறிப்பாக பேராக், சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் மலாக்காவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

#TamilSchoolmychoice

“இடியுடன் கூடிய மழை, அடுத்த மாதத்தின் நடுப்பகுதி வரை தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பருவமழைக் காலம் சீக்கிரம் வந்துவிட்டதா என்று கேட்டதற்கு, “மே 18 அன்று தொடங்கிய வழக்கமான தென்மேற்கு பருவமழையை, மலேசியா இன்னும் அனுபவித்து வருகிறது” என்று சையிலான் கூறினார்.

“இருப்பினும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று பலவீனமாக உள்ளது. இதனால் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிலைமை சற்று மோசமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

கடும் மழையைத் தொடர்ந்து இந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

தீபகற்ப மலேசியா மற்றும் சபாவின் சில பகுதிகளுக்கு நேற்று வானிலை மையம் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையை விடுத்திருந்தது.