சென்னை விமானம் நிலையம் அமைந்திருக்கும் மீனம்பாக்கத்தில் நிறைய அளவில் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பினால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2015-க்கு பிறகு இப்போதுதான் சென்னையில் அதிக அளவில் கனமழை பெய்துள்ளது.
இதற்கிடையில் வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரட்டூர் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
தொடர் மழை, வெள்ளம் காரணமாக, மீட்பு பணிகளுக்காக 4 பேரிடர் குழுவினர் தமிழகம் வந்திருக்கின்றனர்.