Home நாடு ‘நாம்’ ஏற்பாட்டில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை – ‘இனி எல்லாம் சுகமே’

‘நாம்’ ஏற்பாட்டில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை – ‘இனி எல்லாம் சுகமே’

418
0
SHARE
Ad

நாம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் “இனி எல்லாம் சுகமே” எனும் தலைப்பிலான ஸ்ரீ ஆசான்ஜியின் ஆன்மீக உரையைக் கேட்க பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

“நம் வாழ்க்கையில் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். ஒரு சொல், ஒரு சம்பவம், ஒரு மாமனிதர் நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு பலரின் வாழ்க்கையில் தன் உரையால் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் ஆசான்ஜியின் உரையைக் கேட்க அன்புடன் அழைக்கிறேன்” என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன்படும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை தாங்குவார்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சி விவரங்கள்:

நாள் : 11/12/2023, திங்கட்கிழமை
நேரம் : மதியம் 2 மணிக்கு
இடம் : PJ Civic Centre (MBPJ), பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்

காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’. மாற்றம் என்பது எங்கிருந்தோ வராது, நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். பிறக்கப் போகும் புதிய வருடம் மகிழ்ச்சியானதாக அனைவருக்கும் அமைய இது ஒரு பரிசாக இருக்கும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். அவ்வப்போது நம் வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி தேவை. எண்ணங்கள் தெளிவாக இருந்தால், செயல்கள் நிறைவாக இருக்கும். இலக்கைச் சுலபமாக அடையலாம்.

வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத் தட்டாது. அது வரும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நுழைவு இலவசம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’

குறிப்பிட்ட இடமே எஞ்சியிருப்பதால் ஏமாற்றத்தைத் தவிர்க்க உடனடியாகப் பதிந்து கொள்ளுங்கள்.