Home One Line P1 சபா தேர்தல்: போட்டியிடும் தொகுதிகளை பாஸ் அடையாளம் கண்டுள்ளது

சபா தேர்தல்: போட்டியிடும் தொகுதிகளை பாஸ் அடையாளம் கண்டுள்ளது

525
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை பாஸ் கட்சி தேர்வு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

“சபா பாஸ் கட்சி சில தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. முடிவு என்ன என்பதை மத்திய தலைமைத்துவம் இதர கூட்டணிகளுடன் பேச வேண்டும்” என்று சபா பாஸ் கட்சித் தலைவர் முகமட் அமினுடின் அலிங் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி தமது கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ளதாகவும், கிமானிஸ் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டதைப் போல தொடர்ந்து செயல்படும் என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.