Home One Line P1 காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு- மாமன்னர் தம்பதியர் இரங்கல்

காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு- மாமன்னர் தம்பதியர் இரங்கல்

596
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மற்றும் பேரரசியார் ராஜா பெர்மாய்சுரி துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோர் முன்னாள் தேசிய காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

70- களில் தேசத்திற்கு பெருமை சேர்த்த தேசிய காற்பந்து வீரர் காலமானதற்கு மாமன்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நம்புவதாகப் பதிவிட்டுள்ளார்.

“இறந்தவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அவரது மரணம் நாட்டிற்கு பெரும் இழப்பாகும். அவரது பங்களிப்பும் தியாகமும் எப்போதும் நினைவில் இருக்கும், ”என்று இஸ்தானா நெகாரா முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு, பேராக் மற்றும் சிறைத் துறைக்காக விளையாடிய கிருஷ்ணசாமி, அக்காலங்களில் ‘அயர்ன் மேன்’ என்று அழைக்கப்பட்டார். அவர் காயத்திற்குப் பிறகும் விளையாட்டைத் தொடர்வதற்கு எப்போதும் ஆர்வமாக இருப்பதால் இந்த அடைமொழிப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டது.

1970 முதல் 1976 வரை தேசிய அணிக்காக விளையாடிய அவர் 1972- இல் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மத்தியத் திடல் விளையாட்டாளராக (மிட்பீல்டராக) விளையாடினார்.