Home One Line P1 சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை

சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை

550
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அடுத்த மாநிலத் தேர்தலில் வாரிசான் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில், கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று அதன் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

“நாங்கள் புதிய முகங்களையும், (கல்வியாளர்களைப் பொறுத்தவரை) சில பின்னணியையும் கருத்தில் கொள்வோம். ஆனால், எங்கள் முக்கிய அளவுகோல்கள் புதிய அல்லது தகுதிவாய்ந்த முகங்கள் மட்டுமல்ல, கட்சித் தாவ விரும்பாதவர்களும் தான்.

“நாங்கள் பட்டம் பெற்றவர்களை நிறுத்தலாம். நிபுணர்களையும், மருத்துவர்களையும் நிறுத்தலாம். ஆனால், நாளை கட்சித் தாவினால் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு அவர்கள் தற்போதுள்ள போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

#TamilSchoolmychoice

இப்போது சபாவின் இடைக்கால முதல்வராக இருக்கும் ஷாபி, பினாங்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபடி கட்சித் தாவல் எதிர்ப்பு சட்டங்களைப் பார்க்குமாறு, மாநில சட்ட ஆலோசகருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

எவ்வாறாயினும், மாநில தேர்தலுக்குப் பிறகுதான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ஷாபி கூறினார்.

“மக்களவையில் ஒரு மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கட்சி அடிப்படையிலான தேர்தலாகும். அங்கு தொகுதிகள் கட்சியால் வென்றிருக்கும். தனிநபரால் அல்ல. தொகுதியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவில் மாற்றம் ஏற்பட்டால் மாநில அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று ஷாபி கூறினார்.

இதற்கிடையில், தொகுதிகளின் பங்கீடு ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என்று ஷாபி தெரிவித்தார்.

“எங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பவர்களைத் தோற்கடிப்பதற்காக இந்தத் தேர்தலில் நாங்கள் ஒன்றுபடுவதை உறுதி செய்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.