ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அமைதியற்ற நிலை நீடித்துவந்த நிலையில், தற்போது அது தீவிரம் அடைந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தற்போது, நெதன்யாகு வீட்டு முன்பு இருந்து போராடங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அமைதியான போராட்டம், இப்போது தீவிரமடைந்து கலவரமாக மாறியுள்ளது. அங்கு போராடும் மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.
இதனால் மக்கள் பதிலுக்குத் தாக்கி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களில் சமந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் மீது 6- க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கின்றன. மேலும், கொவிட்19 தொற்று குறித்து அவர் சரியான வழிமுறையைக் கையாளவில்லை என்றும் மக்கள் எதிர்த்து வருகின்றனர் .
இஸ்ரேல் இதில் தோல்வி அடைய நெதன்யாகு தான் காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.