Home One Line P1 தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்

தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்

475
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனியார் வாகனத்தில் சவாரி செய்யும் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று செய்தியாளர் சந்திப்பில் இந்த விஷயத்தை அறிவித்தார்.

“நேற்று, தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாததால் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

#TamilSchoolmychoice

“நான் காவல் துறையினருடன் கலந்துரையாடினேன். அவர்கள் அபராதங்களை இரத்து செய்வார்கள். அவர்கள் பணம் செலுத்தியிருந்தால், அவர்கள் மீண்டும் சுகாதார அமைச்சிடமிருந்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1 முதல், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

பேருந்துகள், வாடகைக் கார்கள், இரயில்கள் போன்ற பொது வாகனங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நெரிசலான பொது இடங்களில் இரவு சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், சந்தைகள், திரையரங்குகள் மற்றும் சுற்றுலா தலங்களும் அடங்கும்.