Home One Line P1 பாஸ், அம்னோ அல்லது பெர்சாத்துவிடமிருந்து பிரியாது

பாஸ், அம்னோ அல்லது பெர்சாத்துவிடமிருந்து பிரியாது

586
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்று பாஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பாஸ் கட்சியை  அம்னோ அல்லது பெர்சாத்துவிடமிருந்து பிரிக்க முடியாது என்று அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

“நாங்கள் (பாஸ்) மூன்று கட்சிகளையும் ஒன்றிணைக்க முடிந்தது. நாங்கள் அம்னோவுடன் பிரிந்து செல்ல முடியாது. பெர்சாத்துவிடமிருந்தும் பிரிந்து செல்ல முடியாது” என்று நேற்று தமது முகநூலில் அவர் சுருக்கமாகப்  பதிவேற்றியிருந்தார்.

#TamilSchoolmychoice

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் ஆகியோருடன் அவர் சந்தித்த படமும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் நாட்டில் தற்போதைய அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கூட்டணி அரசாங்கம், அரசியல் பிளவுகளின் மூலம் நம்பிக்கைக் கூட்டணியிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது.

முன்னதாக, அம்னோ தேசிய கூட்டணியில் சேராது, ஆனால், இப்போதைக்கு மொகிதின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று அம்னோ வலியுறுத்தியிருந்தது.

மேலும், இது முவாபாக்காட் நேஷனல் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அதன் தலைவர் வலியுறுத்தி இருந்தார்.

முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அதிகார அத்துமீறல், ஊழல் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.