Home One Line P1 சபாவில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

சபாவில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

421
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மேலும் கடுமையாக்க சபா முடிவு செய்துள்ளது.

சபா மாநில சுகாதாரத் துறை அறிக்கையின்படி, ஜூலை 25-ஆம் தேதி கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை 384- ஆக இருந்ததாகவும், ஆகஸ்ட் 4- ஆம் தேதி 402 சம்பவங்களாக அதிகரித்துள்ளது என்றும் முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் கூறினார். 18 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

“சம்பவங்களின் அதிகரிப்பு குறித்து மாநில அரசு தீவிரமாக கருதுகிறது மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படாவிட்டால் தொற்றுநோய் மோசமடையும் என்று கவலை கொண்டுள்ளது.

“எனவே, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், தண்ணீர் மற்றும் சோப்புடன் கைகளை கழுவ வேண்டும் என்றும், கிருமித்தூய்மியைப் பயன்படுத்தவும், கூடல் இடைவெளியைப் பின்பற்றவும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் தொடர்பான அமலாக்கத்தை அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.