Home One Line P1 மக்களவையில் புகைப்பிடித்ததற்கு ஹிஷாமுடின் மன்னிப்புக் கேட்டார்

மக்களவையில் புகைப்பிடித்ததற்கு ஹிஷாமுடின் மன்னிப்புக் கேட்டார்

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவை அமர்வின் போது, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் புகைபிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து டுவிட்டரில் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

“மன்னிக்கவும், நான் உணரவில்லை. இது ஒரு புதிய பழக்கம்.

“நான் மன்னிப்பு கேட்கிறேன், மீண்டும் அதை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஹிஷாமுடின் மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை துணை சபாநாயகர் ரஷீத் ஹஸ்னோன் ஆராய்வதாகத் தெரிவித்தார்.

“நாம் இதனைக் கவனத்தில் கொள்கிறோம், ஆய்வு செய்வோம்” என்று ரஷீத் கூறினார்.

திங்களன்று அவர் இந்த செய்கையை செய்துள்ளதாக சமூகப் பக்க பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.